உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

திருத்தணி:பெண்ணின் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறி, பணத்தை திருடிய நபரை போலீசார் தேடுகின்றனர். திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தர் மனைவி ரமா, 47. இவர், நேற்று முன்தினம் 10:00 மணிக்கு, திருத்தணி மா.பொ.சி., சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது பணம் வராததால், அருகில் இருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறி, ரமாவிடம் ஏ.டி.எம்., கார்டை வாங்கியுள்ளார். பின், பணம் வரவில்லை எனக்கூறி, ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரமாவிடம் கொடுத்துள்ளார். பின், ரமாவின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி 15,000 ரூபாயை எடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற ரமா, வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு விபரத்தை பார்த்தபோது, 15,000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ