உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய துடுப்பு போட்டி சென்னை வீரர்கள் ஆதிக்கம்

தேசிய துடுப்பு போட்டி சென்னை வீரர்கள் ஆதிக்கம்

சென்னை, இந்திய சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், தேசிய அளவிலான 'ஸ்டாண்ட் அப் பெடில் சாம்பியன்ஷிப்' எனப்படும் நீர் விளையாட்டுகளில் ஒன்றான துடுப்பு போட்டி, ராமநாதபுரத்தின் அரியமான் கடற்கரையில் நடந்தது. இதில், தமிழகம், கேரளா, கோவா உட்பட, 10 மாநில அணிகளைச் சேர்ந்த, 150க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் என, மூன்று பிரிவுகளில் போட்டியிட்டனர். சப் ஸ்பிரின்ட் - 200 மீட்டர், சப் டிஸ்டன்ஸ் - 10 கி.மீ., உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. இதன் இறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், தமிழக வீரர்கள் அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து அசத் தினர். ஆண்களுக்கான சப் டிஸ்டன்ஸ் மற்றும் ஸ்பிரின்ட் போட்டியில், சென்னையின் சேகர் பிச்சை, ஆண்கள் சப் ஸ்பிரின்ட் மாஸ்டர்ஸ் பிரிவில் சக்திவேல் செல்வராஜ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அதேபோல், ஆண்கள் ஜூனியர் 17 வயதுக்கு உட்பட்டோர் சப் டெக்னிக்கல் மற்றும் ஸ்பிரின்ட் பிரிவில் சென்னையின் சபரி, ஆண்கள் சப் - ஜூனியர் 14 வயதுக்கு உட்பட்டோர் சப் ஸ்பிரின்ட் போட்டியில் சென்னையின் முகமது இர்பான் முதலிடம் பிடித்து அசத்தினர். பெண்களுக்கான டெக்னிக்கல் மற்றும் ஸ்பிரின்ட் போட்டியில், சென்னையின் மோனிகா புகழரசு முதல் இடம் பிடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ