உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தென் மாநில தடகள போட்டி சென்னை வீரர்கள் அசத்தல்

தென் மாநில தடகள போட்டி சென்னை வீரர்கள் அசத்தல்

சென்னை;ஆந்திராவில் நடந்த தென் மாநில அளவிலான தடகள போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற சென்னை வீரர்களான பிரியன்குமார் தங்கமும், சஞ்சய் வெள்ளி பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். ஆந்திர மாநில தடகள சங்கம் சார்பில், 36வது தென் மாநில அளவிலான தடகள போட்டி, ஆந்திராவின் குண்டூரில் நடந்தது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட, ஆறு மாநிலங்களை சேர்ந்த, 1,500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இதில், ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்டோர் நீளம் தாண்டுதல் பிரிவில், சென்னை வீரர் பிரியன்குமார், 7.53 மீட்டர் தாண்டி, அந்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல், ஆண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில், சென்னையின் சஞ்சய், முதல் நாள் முடிவில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் 925, உயரம் தாண்டுதலில் 544, குண்டு எறிதலில் 520, 200 மீட்டர் ஓட்டத்தில் 733 என, மொத்தம் 2,722 புள்ளிகள் பெற்றார். இரண்டாவது நாளில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் 677, ஈட்டி எறிதலில் 510, 100 மீட்டர் ஓட்டத்தில் 753 என, 1,940 புள்ளிகள் பெற்று, முடிவில் 4,662 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை