மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
5 minutes ago
திருத்தணி: சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள் திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, பயணியர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி, திருவள்ளூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மூன்று அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, 45க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை - -திருப்பதி இடையே இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, நகரி, புத்துார் வழியாக திருப்பதி சென்று வருகிறது. பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் மட்டும் பேருந்து நிலையம் அருகில் வந்து செல்கிறது. ஆனால் திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லாமல், திருத்தணி பைபாஸ் ரவுண்டானா வழியாக வந்து செல்கிறது. இதனால், திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ரவுண்டானாவில் இருந்து, 3 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளில் ஏறி, 10 ரூபாய் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளன. இரவு, 8:00 மணிக்கு மேல் திருத்தணியில் இருந்து சென்னை கோயம்பேடு பகுதிக்கு செல்ல பேருந்து வசதியில்லை. இவர்கள் திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, பைபாஸ் ரவுண்டானா வரை சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியும். எனவே, சென்னை -திருப்பதி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்து திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 minutes ago