மேலும் செய்திகள்
போதை மாத்திரைகள் கடத்தல் சென்னை வாலிபர்கள் கைது
21-Sep-2025
திருத்தணி:மும்பையில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் விரைவு ரயிலில், போதை மாத்திரைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் நேற்று மாலை, திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ரேணிகுண்டாவில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கினார். சந்தேகத்தின்படி, வாலிபரை பிடித்து விசாரணை செய்த போலீசார், 240 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னை திருவேற்காடைச் சேர்ந்த பாலகுமார், 22, என, தெரியவந்தது. அவரை கைது செய்த திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Sep-2025