மேலும் செய்திகள்
தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்க அறிவுரை
04-Apr-2025
காலை உணவு திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
11-Apr-2025
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்படாமல் தவிர்க்க, மின்வாரிய அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார்.திருவள்ளூர், திருமழிசை மற்றும் திருத்தணி கோட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் துணை மின் நிலைய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். கோடை காலத்தில் தேவையான மின் பகிர்வு வழங்க வேண்டும். மின்பற்றாக்குறை ஏற்படாமல் மின்சாதனங்கள் மற்றும் அனைத்து மின் பாதைகளையும் பராமரிக்க வேண்டும். மின்தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி பேசினார்.
04-Apr-2025
11-Apr-2025