உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

பேருந்து நிழற்குடை அமைக்கப்படுமா? திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்கத்தில் செல்லும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோரமங்கலம் ஊராட்சி சோளிங்கர் மார்கத்தில் பேருந்து ஏறிச் செல்லும் பயணியருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் திருத்தணி மார்கத்தில் பயணியர் செல்வதற்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பயணியர் மழையில், நனைந்து காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே ஒன்றிய நிர்வாகம், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். -எஸ்.பாலசந்தர், கோரமங்கமலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி