ரேஷன் கடையில் அரிசி கடத்தல் உளுந்தை விற்பனையாளர் மீது புகார்
உளுந்தை:கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அருள், 42, என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.இரு தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கடையின் முன் கார் ஒன்றை நிறுத்தப்பட்டு, அரிசி மூட்டைகளை கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உளுந்தை பகுதியில் விசாரித்த போது ரேஷன் கடை விற்பனையாளர் கடையை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமல் வந்தாகவும், பொருட்கள் இல்லை என கூறியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உளுந்தை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நியாய விலை கடை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''விற்னையாளர், இரு ஆண்டுகளுக்கு முன் இதேபோல வயலுார் கடையில் வேலை பார்த்தபோது ஒழுங்காக கடைக்கு வராமல் பொருட்கள் வழங்காமல் இருந்ததற்காக ஆறு மாதம், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, உளுந்தை கடை அரிசி காரில் கொண்டு செல்லும் வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.