மேலும் செய்திகள்
ரயில் மறியல் செய்த 127 பேர் மீது வழக்கு
22-Dec-2024
செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் அடுத்த, அரண்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், 32; இவர், நேற்று முன்தினம் இரவு, அரண்வாயல் ஊராட்சி அலுவலகம் அருகே, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், காமேஷ் குமார் ஆகிய இருவரும், தமிழரசனிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கினர்.இதில் காயமடைந்த தமிழரசன், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, தமிழரசன் அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Dec-2024