உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்

புகார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அலட்சியம்

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்காலிக மஸ்துார் பணியாளர் நியமனம் செய்ய, கலெக்டர் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் மஸ்துார் பணியாளர் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடம்பத்துார் ஒன்றியத்தில் மட்டும் ஒரு மாதமாக மவுனம் காத்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, கலெக்டர் உத்தரவினை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தாமல், காலம் தாழ்த்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தா.ஸ்ரீதர், கடம்பத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ