உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.1 கோடி கையாடல் கலெக்டரிடம் புகார்

ரூ.1 கோடி கையாடல் கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்:திருப்பாச்சூர் ஊராட்சி தலைவர் வரிப்பணம் 1 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக, துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் ஊராட்சி துணைத் தலைவர் கெத்சீயாள் வசந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்பது பேர் திருவள்ளூர் கலெக்டரிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பாச்சூர் ஊராட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க, பணம் வசூலித்து அதை ஊராட்சி கணக்கில் காட்டாமல் உள்ளார். இதனால், 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊராட்சிக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களாகிய நாங்கள் விளக்கம் கேட்டால் முறையாக பதில் கூறுவதில்லை. இதுகுறித்து, பலமுறை ஒன்றிய அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ