உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மப்பேடில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்

மப்பேடில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்

மப்பேடு:மப்பேடு காவல் நிலைய வளாகத்தில் விபத்து மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வீணாகி வருகின்றன. கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், வழிப்பறி, விபத்து போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதில், இருசக்கர வாகனங்களே அதிக அளவில் உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பில்லாமல், திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்தும் வீணாகி வருகின்றன. இதில் விபத்து, உரிமம் உட்பட பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், வழக்கு வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட, இந்த வாகனங்கள் மிகவும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ