பறிமுதல் வாகனங்களை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்
திருவள்ளூர்:ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராதம் செலுத்தி மீட்காவிட்டால், பொது ஏலம் விடப்படும் என, கலெக்டர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுர் மாவட்ட ரேஷன் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரால், ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது, பொது விநியோக திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வாகனங்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில், விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 71 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை யை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தவில்லை. மேலும், இந்த வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. எனவே, அபராத தொகையை, வரும் 19ம் தேதிக்குள் செலுத்தி, வாகனங்களை மீட்க வேண்டும். தவறும்பட்சத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.