உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்கள் இடையே மோதல் ஆசிரியர்கள், பெற்றோர் கவலை

மாணவர்கள் இடையே மோதல் ஆசிரியர்கள், பெற்றோர் கவலை

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மதியம் உணவு இடைவெளியின் போது, பிளஸ் 2 மாணவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிளஸ் 1 மாணவர்கள் தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்த இருவர், சமரசம் செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமாபுரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், அவர்களை தாக்கினர். ஆசிரியர்கள் வந்தவுடன் மாணவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி முடிந்து வெளியே வந்த பிளஸ் 1 மாணவர்கள் இருவரை, லட்சுமாபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆறு பேர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ