குப்பம்கண்டிகையில் நெற்களம் அமைக்கும் பணி
திருவாலங்காடு,திருவாலங்காடு ஒன்றி யம் குப்பம் கண்டிகை ஊராட்சியில், 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம்செய்யப்படுகிறது.இங்கு அறுவடை காலத்தில் நெற்களம் இல்லாததால் விவசாயிகள் தங்கள்அறுவடை செய்த நெல்லை சாலையிலும், விவசாய நிலுத்திலும் வைத்து நெல்லை பாதுகாத்துவந்தனர். அப்போது மழை, இயற்கை பேரிடரால்பல்வேறு சிரமத்தை அனுபவித்து வந்தனர். தங்கள் பகுதியில் நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன், ஒன்றிய மேம்பாட்டு நிதியில் இருந்து 2 லட்சம்ரூபாய் ஒதுக்கினார். இதையடுத்து நெற்களம் அமைக்கும் பணி நடந்துவருகிறது.