உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் கட்டட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட அவலம்

அரசு பள்ளியில் கட்டட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட அவலம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் தும்பிகுளம் கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, மதிய உணவு சமைப்பதற்காக, பள்ளி வளாகத்திலேயே சமையலறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன், பள்ளி உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ், 8.60 லட்சம் ரூபாயில் பள்ளி வளாகத்தில் சமையல் அறை கட்டடம் கட்டும் பணி துவங்கியது.சமையல் அறை கட்டடத்திற்கு மேல்தளம் அமைக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவர்களுக்கு, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் அறையில் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.அங்கிருந்து, பெண் சமையலர் மற்றும் உதவியாளர் தயாரித்த சத்துணவுவை தலைமேல் வைத்து அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. மழை காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு தயாரித்து கொண்டு வருவதில் சமையலர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக பாதியில் நிறுத்தப்பட்ட சமையல் அறை கட்டடத்தை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை