மேலும் செய்திகள்
சாலை விபத்தில் தம்பதி படுகாயம்
06-Jan-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 55; கட்டட மேஸ்திரி. இவர்; கடந்த 11ம் தேதி வழக்கம்போல, திருத்தணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சங்கரின் மகன் கார்த்தி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
06-Jan-2025