மேலும் செய்திகள்
தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
13-Apr-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 52; நேற்று மதியம், அவரது வீட்டின் அருகே ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவில் இருவர் வந்தனர்.முருகேசனுக்கு சொந்தமான இரு ஆடுகளை திருடி, ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தப்ப முயன்றனர். அதை கண்ட அக்கம்பக்கத்தினர், ஆட்டோவை சுற்றி வளைத்து அதில் இருந்த இருவரை பிடித்தனர்.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஆடுகளை திருடியவர்கள், ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்து, 35, மற்றும் துர்கா, 30, என்பது தெரியவந்தது.இருவர் மீதும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர்.
13-Apr-2025