உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணியில் நான்கு வழிச்சாலை பணி தடுத்து நிறுத்திய தம்பதியால் பரபரப்பு

 திருத்தணியில் நான்கு வழிச்சாலை பணி தடுத்து நிறுத்திய தம்பதியால் பரபரப்பு

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, இரு வழிச்சாலையாக உள்ளது. தற்போது, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருவள்ளூர் டோல்கேட் முதல் தமிழக எல்லையான திருத்தணி பொன்பாடி வரை நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தியும், நில இழப்பீட்டாளர்களுக்கு உரிய தொகையும் வழங்கப்பட்டது. நேற்று, திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடந்து வந்தது. அப்போது, முருகேச ரெட்டியார் மற்றும் அவரது மகன், மருமகள் ஆகியோர், 'எங்களது நிலத்தில் சாலை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நிலத்தை விட, கூடுதலான இடத்தில் சாலை பணிகள் செய்கிறீர்கள். 'இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என, பொக்லைன் இயந்திரம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து நில எடுப்பு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் திருத்தணியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, முருகேச ரெட்டியார் மற்றும் அவரது மகன், மருமகள், 'நீங்கள் தவறாக அளவீடு செய்து, நிலம் எடுத்துள்ளீர்கள்' என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து சென்றனர். அதன்பின், நான்கு வழிச்சாலை பணி துவங்கியது. இதனால், இரண்டரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை