உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு பல இடங்களில் பறக்கும் கட்சி கொடிகள்

காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு பல இடங்களில் பறக்கும் கட்சி கொடிகள்

திருவாலங்காடு:தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜன., 27ம் தேதி உத்தரவிட்டது.இதையடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும்,- பொது இடங்களிலும் வைத்துள்ள கட்சி கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அவகாசம் முடிந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை தொழுதாவூர் மணவூர் என பல இடங்களிலும் யாரும் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை. ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் சாலையில் உள்ள தாராட்சி, பாலவாக்கம், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும், சாலையோர கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி