உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளிம்புகளில் ஏற்பட்ட பிளவு சாலை சரிந்து விழும் அபாயம்

விளிம்புகளில் ஏற்பட்ட பிளவு சாலை சரிந்து விழும் அபாயம்

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் இருபுறத்திலும் இணைப்பு சாலைகள் உள்ளன.ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் உள்ள இணைப்பு சாலை உயரமாக அமைக்கப்பட்டதால், இச்சாலையோரம், 8 அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. பள்ளத்தில் சாலை சரியாமல் இருக்க, சாலை அமைக்கும் போது, அதன் ஓரத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டது.இந்த தடுப்புக்கும், சாலைக்கும் இடையே தற்போது பிளவு ஏற்பட்டு, எந்த நேரத்திலும் பள்ளத்தில் தடுப்பு சரிந்து விழும் நிலையில் உள்ளது. அப்படி தடுப்பு சரிந்தால், இணைப்பு சாலையும் சரியும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, இணைப்பு சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி