உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெஞ்சல் புயலால் திருத்தணியில் 130 ஏக்கர் பயிர்கள் சேதம்

பெஞ்சல் புயலால் திருத்தணியில் 130 ஏக்கர் பயிர்கள் சேதம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். சம்பா பருவத்தில், 1,250 ஏக்கர் பரப்பில் நெல் பயிரும், 65 ஏக்கர் பரப்பில் பயிறு வகைகள், 140 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலை, எள்ளு போன்ற எண்ணெய் வித்து பயிர்கள் விவசாயிகள் செய்திருந்தனர்.இந்நிலையில், மேற்கண்ட பயிர்கள் அறுவடைக்கு, தயாராக இருந்த போது, கடந்த 30ம் தேதி முதல், 4ம் தேதி வரை, 'பெஞ்சல்' புயலால் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், பயிர் நிலங்களில் மழைநீர் தேங்கியும், நெல், வேர்க்கடலை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.இதையடுத்து, விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்கள் ஆலோசனைப்படி மழை நின்றதும் பயிரில் தேங்கியிருந்த மழைநீரை வடிகால் அமைத்து வெளியேற்றினர்.தொடர்ந்து, வேளாண் துறை உதவி இயக்குனர் பிரேம் தலைமையில், வேளாண் அலுவலர்கள் செருக்கனுார், எஸ்.அக்ரஹாரம், வி.கே.என்.கண்டிகை, சூர்யநகரம், பீரகுப்பம், வீரகநல்லுார் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டனர்.இதில், 106 ஏக்கர் பரப்பில் நெற்பயிர், 24 ஏக்கர் பரப்பில் பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்துகள் மழைநீர் மூழ்கி சேதம் அடைந்ததை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, வேளாண் உதவி இயக்குனர் பிரேம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ