மேலும் செய்திகள்
சுய உதவிக்குழு பெண்கள் வங்கிக் கடன் பெற அழைப்பு
10-May-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தாட்கோ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது குறித்து, வங்கி மண்டல மேலாளர் மற்றும் பிராந்திய மேலாளர்களுடன் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், 'தாட்கோ' திட்டத்தின் வாயிலாக, ஆதிதிராவிடர் மக்கள் சுயதொழில் துவக்குவதற்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்கள் அளிக்கும் வங்கி கடனுதவிக்கான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.அரசு மானியத்துடன் கூடிய திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, வங்கிக் கடன் உதவியை வழங்க வேண்டும். தாட்கோ வாயிலாக வழங்கப்பட்டுள்ள நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, பயனாளிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், 'தாட்கோ' மேலாளர் சரண்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், முன்னோடி வங்கி மேலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
10-May-2025