மேலும் செய்திகள்
வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது
11-May-2025
திருவள்ளூர், சென்னை நகர குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் அடுத்த பூண்டி கொசஸ்தலை ஆற்றில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகும் கொசஸ்தைலை ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது.பின், கால்வாய் வாயிலாக, சென்னை புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதன்பின், சென்னை நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வாயிலாக, ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்ட்' வந்தடைகிறது. அங்கிருந்து, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வந்து சேர்கிறது.தற்போது, கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால், சாய்கங்கை கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 'ஜீரோ பாயின்ட்'டில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் வழியில், சில இடங்களில் கால்வாய் சேதமடைந்துள்ளது.மேலும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகிலேயே, கால்வாயின் கான்கிரீட் சிலாப் உடைந்துள்ளது. இதனால், தண்ணீர் விரயமாகி வருகிறது. எனவே, சேதமடைந்த கால்வாயை நீர்வளத்துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
11-May-2025