சுடுகாடு சாலை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
திருவாலங்காடு:வேணுகோபாலபுரம் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலி யுறுத்தி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது . குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளும் அங்கு இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய செல்லும் போது, கி ராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சேதம டைந்த சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.