உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி: பஞ்செட்டி - நெடுவரம்பாக்கம் சாலையில், தரைப்பாலம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். பொன்னேரி அடுத்த பஞ்செட்டி - நெடுவரம்பாக்கம் சாலையில், மழைநீர் செல்வதற்காகன பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மேற்பகுதி கட்டுமானத்தில் கான்கிரீட் பூச்சுகள் சிதறி, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. மேலும், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், தரைப்பாலம் பலவீனமடையும் நிலை உள்ளது. மேலும், இப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில், இரும்பு கம்பிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலம் முழுமையாக பலவீனமடைந்து வீணாகும் முன், உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி