தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் ஆபத்து
பூந்தமல்லி,:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், வரதராஜபுரம்ஆகிய ஊராட்சி பகுதிகளில் பசுமாடுகளை வளர்ப்போர், தங்களது மாடுகளை வீடுகளில் கட்டி வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இதனால், கண்டமேனிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், தேசிய நெடுஞ்சாலையில் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.