மேலும் செய்திகள்
தடுப்பு இல்லாத வளைவு வாகன ஓட்டிகள் அவதி
07-Dec-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சித்தராஜகண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ள பிற மாவட்ட சாலையாகும்.அந்த சாலையில், ஆபத்தான நிலையில் மூன்று இடங்களில் வளைவுகள் உள்ளன. வாகன ஓட்டிகள் சற்று அசந்தாலும், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அந்த சாலையில், வளைவுகள் இருப்பதற்கான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால், இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் கவிழ்ந்து விழும் ஆபத்து அதிகம் உள்ளது. வளைவுகள் உள்ள இடத்தில், சாலையோர தடுப்பு அமைக்க வேண்டும். வளைவுகள் இருப்பதற்கான, ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
07-Dec-2024