ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்தி வைப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை கருதி, பெரும்பாலான பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நேற்று திட்டமிடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருந்தனர். இருப்பினும் நேற்று, ஆக்கிரமிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‛பாதுகாப்பு வழங்க போதிய போலீசார் இல்லை என கும்மிடிப்பூண்டி போலீசார் தெரிவித்தனர். அதனால், வரும் 16ம் தேதிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது' என்றனர்.