மேலும் செய்திகள்
இரும்பு கம்பி திருடிய இருவருக்கு வலை
23-Apr-2025
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கோளூர், பனப்பாக்கம், பெரியகரும்பூர் ஆகிய கிராமங்களுக்கு, மெதுார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடைபெறுகிறது. இதில், பெரியகரும்பூர் கிராமத்திற்கு வரும் உயரழுத்த மின்கம்பிகள், 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.இவை, அதன் மின்கடத்தும் தன்மையை இழந்து, அடிக்கடி அறுந்து விழுகிறது. இதனால், விவசாயம் மற்றும் குடியிருப்புகள், 300க்கும் அதிகமான மின்பயனீட்டாளர்கள் உள்ளதால், காலாவதியான மின்கம்பிகளால் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது.இதனால், விவசாய மோட்டார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.இந்த மின்கம்பிகளை மாற்றுவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, கோளூரில் இருந்து பனப்பாக்கம் வரையிலான மின்கம்பிகள் மாற்றப்பட்டன.பனப்பாக்கத்தில் இருந்து, 1 கி.மீ., தொலைவிற்கு புதிய மின்கம்பிகள் மாற்றம் செய்யப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்காக கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பிகள், அங்குள்ள பள்ளி வளாகத்தில் வீணாகி வருகிறது.இதுகுறித்து கிராமவாசிகள் பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:காலாவதியான மின்கம்பிகள் விவசாய நிலங்கள் வழியாக பயணிக்கின்றன. இவை அடிக்கடி அறுந்து விடுகிறது.இதனால், எப்போது அறுந்து விழும் என தெரியாத நிலையில், அச்சமுடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.மேலும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, மின்வாரிய உயரதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
23-Apr-2025