உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் சிறுவாபுரி வரும் பக்தர்கள் தவிப்பு

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.இங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் சவாலாக, கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. வரிசையில் நின்று சிறுவாபுரி முருகனை தரிசிக்கும் நேரத்தை விட, கோவில் வெளிப்புறத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட அதிக நேரமாகிறது என, பக்தர்கள் புலம்பி வருகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அடுத்த புதுரோடு சந்திப்பில் தடுப்பு அமைத்து, இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், இணைப்பு சாலையின் இருபுறத்தில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், வாகனங்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, மினி பேருந்து மூலம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த மாற்று ஏற்பாட்டால், பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:சிறுவாபுரி முழுதும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளும், கோவிலை ஒட்டிய பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளும் இயங்கி வருகின்றன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, மாற்று இடம் கொடுத்து, சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் போதிய அளவில் 'பார்க்கிங்' வளாகம் ஏற்படுத்தினால், பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்ல வழிவகுக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை