/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி;திருத்தணி முருகன் கோவிலில் நேற்று மூலவரை தரிசிக்க, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் சென்று தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி தேர் வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.