உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை

நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, நரசிங்கமேடு, வடக்குப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில், 400 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீர் அங்குள்ள கால்வாயில் வெளியேற்றப்பட்டு, எலவம்பேடு ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.இந்த கால்வாய் முழுதும், ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி துார்ந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தேங்குகிறது.மழைவிட்டும் தண்ணீர் வடிவதற்கு, 10 - 15 நாட்கள் ஆகும் நிலையில் நெற்பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.தற்போதும், அதே நிலை இருப்பதால், விவசாயிகள் அவற்றை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எலவம்பேடு ஏரிக்கும் மழைநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மேற்கண்ட கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை