UPDATED : ஜூலை 24, 2025 02:27 AM | ADDED : ஜூலை 24, 2025 02:24 AM
திருத்தணி:அரசினர் கலைக் கல்லுாரியில் டிஜிட்டல் வங்கி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நேற்று நடந்தது.திருத்தணி சுப்பிர மணிய சுவாமி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், முதுகலை வணிகவியல் துறை சார்பில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை வங்கியுடன் இணைந்து 'டிஜிட்டல் வங்கி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி' நேற்று நடந்தது.இதில், சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் விக்னேஷ்வரன், பிரதிநிதி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, டிஜிட்டல் வங்கி மற்றும் பண பரிவர்த்தனை அமைப்புகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் இடையே ஏற்படுத்தினர்.Galleryமேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து, மாணவ - மாணவியர் இடையே வினாடி- - வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.