உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நேரடி நெல் கொள்முதல் நிலையம் 76.78 லட்சம் கிலோ வரத்து

நேரடி நெல் கொள்முதல் நிலையம் 76.78 லட்சம் கிலோ வரத்து

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இதுவரை 76.78 லட்சம் கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவ நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்வதற்காக, மாவட்டம் முழுதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் - 62, மத்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் - 4 என, மொத்தம் 66 இடங்களில், நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.இதுவரை, 76.78 லட்சம் கிலோ நெல், 1,102 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.சம்பா பருவ நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அனைவரும் இடைத்தரகர் மற்றும் வியாபாரிகளுக்கு இடம் கொடுக்காமல், 'eDPC' என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்யலாம். ஒரு குவிண்டால் சன்ன ரக நெல் 2,310; பொது ரகம் 2,265 ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்து பயன் அடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை