உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் ஆடு அடிக்கும் தொட்டி ஏலம் எடுத்த தி.மு.க., நிர்வாகி அதிருப்தி

மீஞ்சூரில் ஆடு அடிக்கும் தொட்டி ஏலம் எடுத்த தி.மு.க., நிர்வாகி அதிருப்தி

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 35க்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு ஆடுகளை அறுத்து சுத்தம் செய்வதற்கும், சுகாதாரமாக உள்ளவையா என்பதை பரிசோதனை செய்வதற்குமான ஆடு அடிக்கும் தொட்டி இல்லை.இறைச்சி கடைகளிலேயே ஆடுகள் அறுக்கப்படுகிறது. அவற்றின் சுகாதாரம் குறித்து எந்தவொரு ஆய்வும் மேற்கொள்வதில்லை.அதே சமயம் பேரூராட்சி நிர்வாகம் ஆடு அடிக்கும் தொட்டிக்கு ஏலம் விட்டு, ஒப்பந்ததாரர் வாயிலாக இறைச்சி வியாபாரிகளிடம் கட்டணமும் வசூலித்து வந்தது.இதற்கு வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடு அடிக்கும் தொட்டிக்கான கட்டடம் அமைக்காமல் கட்டணம் செலுத்தமாட்டோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.கட்டடம் அமையாமல் ஏலம் விடக்கூடாது என மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கட்டடம் அமைக்காமல் ஏலம்விடமாட்டோம் என பேரூராட்சி நிர்வாகமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று மீஞ்சூர், மூன்றாவது வார்டு கிளை தி.மு.க., நிர்வாகி ஜோதிலிங்கம், 42, என்பவர், ஆடு தொட்டி ஏலம் எடுக்க, 50,000 ரூபாய் முன்பணம் கட்டியதாகவும், இதுவரை அதற்கான உத்திரவாத கடிதம் வழங்கவில்லை எனவும் கூறி கட்சிக்கொடியுடன் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.செயல் அலுவலர் மகேஸ்வரி, அவரிடம் பேச்சு நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, ஜோதிலிங்கம் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இச்சம்பத்தால், பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.ஆடு அடிக்கும் தொட்டிக்கு கட்டடம் அமைக்காமல் தி.மு.க., நிர்வாகி நடத்திய போராட்டம் வியாபாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை