மேலும் செய்திகள்
சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு
11-Apr-2025
திருத்தணி, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட்புஷ்பா, மாவட்ட கலெக்டர் பிரதாப் மற்றும் எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள், தலைமை குற்றவியல் நடுவர் மீனாட்சி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நளினிதேவி ஆகியோர் நேற்று காலை திருத்தணி கிளை சிறைச்சாலைக்கு வந்தனர்.கிளை சிறையில் இருக்கும் சிறை கைதிகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், தரமான உணவு மற்றும் சுற்றுப்புறம் துாய்மை போன்ற வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து சிறை கண்காணிப்பாளரிடம் கேட்றிந்தார். மேலும், கைதிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். பின், மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரி சமையலறை, சட்ட சேவை மையம், கைதிகளின் நேர்காணல் அறை, சுற்றுச்சுவர் பாதுகாப்பு , நுாலகங்கள் போன்றவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா கூறுகையில், 'சிறையில் உள்ள கைதிகளிடம் குறைகள் கேட்டு அறிந்தோம். மேலும் மன அழுத்தத்தில் உள்ள கைதிகளுக்கு தியானம், பயிற்சி வகுப்பு நடத்தப்படும். கைதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல், திருந்தி வாழ்வதற்கு, சிறப்பு வகுப்பு, பயிற்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார். திருவள்ளூர் கிளை சிறையையும் பார்வையிட்டு கைதிகளிடம் குறைகள் கேட்டனர்.
11-Apr-2025