உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நிழற்குடை சுவரில் மோதி போதை வாலிபர் பலி

 நிழற்குடை சுவரில் மோதி போதை வாலிபர் பலி

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த பொன்னாங்குளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 38; வெல்டிங் தொழிலாளி. கடந்த 31ம் தேதி இரவு உறவினர்களுடன் சேர்ந்து, பாகசாலை கொசஸ்தலையாற்று அருகே உள்ள நிழற்குடையில் மது அருந்தினார். பின், எழுந்து சென்றபோது தடுமாறி நிழற்குடையின் துாண் மீது மோதினார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை