மேலும் செய்திகள்
கல் குவாரி பாதை மண் சரிவால் பீதி
23-Sep-2024
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த சாலையின் இருபுறமும், ஏராளமான வணிக கடைகள், உணவகங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையில் மண் அதிக அளவில் படித்துள்ளதால், வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது.இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் கண்களில் துாசி விழுந்து அவதிக்கு உள்ளாகின்றனர். புழுதியால் சாலையோரம் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு சுவாசம் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சாலையில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.மேலும். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்லும் போது, தார்ப்பாய் போர்த்தி மூடி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
23-Sep-2024