குடும்ப தகராறில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் சந்திரலேகா 21.இவருக்கும் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த பாலாஜிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக சித்திரலேகா கடந்த வாரம் தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பாலாஜி தனது உறவினர்களுடன் வீரக்கோவில் கிராமத்திற்கு வந்தார்.அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கட்டையால் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.