ஏரியில் இருந்து முதியவர் உடல் மீட்பு
ஊத்துக்கோட்டை, பேராத்துார் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முத்து, 68. கடந்த 2ம் தேதி இவர், மாடுகளை மேய்க்கும் பணியை செய்து வந்தார். பேராத்துார் ஏரி அருகே மாடு மேய்க்கச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை; பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, பேராத்துார் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது முத்து என்பது தெரிய வந்தது.வெங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து விசாரிக்கின்றனர்.