உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி கொள்ளை சம்பவத்தில் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்

கும்மிடி கொள்ளை சம்பவத்தில் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே நகை, பணம் கொள்ளை சம்பவத்தில் தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்தவர் ராஜேஸ்வரி, 87. கடந்த 11ம் தேதி மதியம், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியை தலையில் தாக்கி, இரு பீரோக்களில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றார். பலத்த காயமடைந்த மூதாட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நவீன் மனைவி சுப்பிரியா, 20, என்பவரை, கடந்த 14ம் தேதி கைது செய்தனர். விசாரணையில், மூதாட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுப்பிரியா, சம்பவத்தன்று மூதாட்டியிடம் கடனாக பணம் கேட்க சென்றார். பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டடத்தில் மூதாட்டியை தள்ளியபோது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அப்போது, இரு பீரோக்களில் இருந்த, 1.80 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளை, சுப்பிரியா கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி