தீக்காயம் ஏற்பட்ட மூதாட்டி பலி
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் மனைவி சரஸ்வதி, 70.இவர் கடந்த 7 ம் தேதி வீட்டின் வெளியே இருந்த அடுப்பில் வைக்கப்பட்டிருந்த வெந்நீரில் கால் தடுக்கி விழுந்தார். இதில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இறந்தார்.மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.