உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னாள் படை வீரர்களுக்கு எலக்ட்ரீஷியன் பயிற்சி

முன்னாள் படை வீரர்களுக்கு எலக்ட்ரீஷியன் பயிற்சி

திருவள்ளூர்:முன்னாள் படைவீரர்களுக்கு எலக்ட்ரீஷியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு பெறும் வகையில், பல விதமான திறன் பயற்சி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மறு வேலைவாய்ப்பு பெற ஏதுவாக, அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் எலக்ட்ரீஷியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை பெற உடனடியாக திருவள்ளூர் ஜே.என்.சாலை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044- - 2959 5311 என்ற தொலைபேசியில் உரிய விபரங்களை கேட்டறிந்து நேரிலோ அல்லது tn.gov.inஎன்ற இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை