உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அபாய நிலையில் மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்

அபாய நிலையில் மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்

ஜமீன்கொரட்டூர்:பூந்தமல்லி ஒன்றியம் திருமழிசை அருகே ஜமீன் கொரட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பல்வேறு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், அச்சத்துடன் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை