உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?

ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?

கும்மிடிப்பூண்டி:சார் - பதிவாளர் அலுவலகம் அருகே, புதிதாக முளைத்துள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகம் அருகே, தாசில்தார் அலுவலக வளாக சுவரை ஒட்டி, இரு மாதங்களுக்கு முன் தனியார் சார்பில் புதிதாக 'ஹாலோ பிளாக்' கட்டடம் கட்டப்பட்டது.இந்த இடம், பாப்பான்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட, சர்வே எண்: 319/4ல் உள்ள மயானம் வகையை சேர்ந்தது என, தாசில்தார் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தாசில்தார் அலுவலக வளாக சுற்றுச்சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே ஏன் தாசில்தார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகுதிமக்கள் முன்வைக்கின்றனர்.புதிதாக முளைத்துள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற தவறினால், மேலும் பல ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவதற்கு வழிவகுக்கும்.எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 12, 2025 18:49

தாசில்தார் அலுவலகமும் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதும் நல்லது போலும்


Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 10, 2025 22:53

காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்கா ஆக்கிரமிப்புகள் கட்டுக்கட்டாக கள்ளப்பணம் கைவசம் பெறுவதால் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அமைதி காத்தல் தொடர்வதால் சாலைகள் சோலைகள் பொது இடங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் நீர் ஆதாரங்கள் அழிந்துகொண்டே வருகின்றது


Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 10, 2025 22:45

காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்கா ஆக்கிரமிப்புகள் கட்டுக்கட்டாக பணம் பெரும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாலும் வருவாய்த்துறையினரும் தங்களுக்கு வருவாய் பார்த்துக் கொண்டு வெறும் வாய் உறுதிமட்டும் தருவதால் சாலைகள் பொது இடங்கள் நீர் ஆதாரங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் அனைத்தும் மறைந்துகொண்டும் குறைந்துகொண்டும் போய்க்கொண்டு வருகிறது பத்திரிக்கைகளும் பிரசுரிப்பதில்லை ஊடகங்களும் வெளியிடுவதில்லை


Bhaskaran
ஜூலை 09, 2025 10:13

வெயிட்டாக கவனித்ததால் கவனிக்கவில்லை போங்கப்பா