உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு

சாலையோர குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே கைவண்டூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர்.கோழி இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை சிலர் கொட்டி அசுத்தமாக்கி வருகின்றனர். இதனால், திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலை வழியாக செல்லும் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் துர்நாற்றத்தால் முகம்சுளித்த படி செல்கின்றனர். மேலும், அருகில் உள்ள கைவண்டூர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர்.எனவே, ஊராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் இணைந்து, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும். மேலும், இனி வரும் காலங்களில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை