ஏரி கலங்கல் சீரமைக்க எதிர்பார்ப்பு
ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கதனநகரம் ஊராட்சி, ஆர்.ஜே.கண்டிகை கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதி, போதிய பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இதனால், மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், உபரிநீர் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. எனவே, ஏரி கலங்கல் பகுதியை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.