உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பட்டு,அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான 360 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில், கண் கண்ணாடி அளிக்கப்பட உள்ளது. மேலும், ஏழு மாணவர்களுக்கு, திருத்தணி அரசு மருத்துவமனையில் உயர் பரிசோதனை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை