உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் எதிர்பார்ப்பு

 மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் நடந்த குறைதீர் மற்றும் ஆலோசனை கூட்டத்தில், முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் வளாகங்களிலும், சிப்காட் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் குறைதீர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வெள்ளிக் கிழமைகளில் இந்த கூட்டம் நடைபெறும். அதன்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், நில எடுப்பு சிறப்பு துணை கலெக்டர் உமாசங்கரி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், திட்ட அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினர், 60 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில், 'கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதியின்றி, மழைக்காலங்களில் தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து உற்பத்தி பாதிக்கிறது. 'அடுத்தடுத்து மழை பெய்ய இருப்பதால், முறையான மழைநீர் வடிகால்வாய் வசதியை உடனே அமைக்க வேண்டும்' என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 'உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்' என, சிப்காட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற தொழிற்சாலை நிர்வாகத்தினர், 'விரைவில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை